கங்கையம்மன் கோவிலில் இன்று ஆண்டு விழா
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில் இன்று ஆண்டு விழா நடக்க உள்ளது.பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாஷ்யம் நகரில்,கங்கையம்மன் கோவில். இந்த கோவிலின் 87ம் ஆண்டு திருவிழா இன்று நடக்கிறது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீராமபுரம் சவுடேஸ்வரி கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு பாஷ்யம் நகரை வந்தடையும்.காலை 11:00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு பூஜை, மஹா மங்களாரத்தி நடக்கும். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்படும்.மாலை 6:30 மணிக்கு கரக ஊர்வலம் ஸ்ரீராமபுரம், சுதந்திரநகர், அனுமந்தபுரம், ஓக்லிபுரம், ராமசந்திரபுரம், சாய்பாபா நகர், பிரம்மபுரம், தயானந்தநகர், பண்டிரெட்டி சதுக்கம், கவுதமபுரம், பாஷ்யம்நகர் வழியாக கோவிலை வந்தடையும். இச்சமயத்தில், பொய்க்கால் குதிரை, வாண வேடிக்கை, பேண்டு வாத்தியம் நடக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.கரகத்தை ஆர்.பிரபாகர், கங்கையம்மனின் சிரசை பி.பிரமோத் ஆகியோர் எடுக்கின்றனர். இரவு 10:00 மணிக்கு தமிழகத்தை சேர்ந்த பாலுவின் பாரத மாதா நாடக மன்றத்தின் நாடகம் நடக்கிறது.