உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 3 மணி நேரத்திற்கு முன்பே வந்துருங்க!

3 மணி நேரத்திற்கு முன்பே வந்துருங்க!

பெங்களூரு: 'இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக, மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்துவிடுங்கள்' என, பயணியரை, பெங்களூரு விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, நம் படையினர் தகர்த்தனர். இதனால் நம் நாட்டில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.அடுத்து இருதரப்பிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம் நாட்டின் பல விமான நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. ஏராளமான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில் பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு, அனைத்து விமான நிலையங்களிலும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ''பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணியரும், சுமூக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கிறோம். ''இதனால் விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே பயணியர், விமான நிலையம் வந்து விடுங்கள்,'' என கூறப்பட்டுள்ளது.முன்பு விமானத்தில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பயணியர் விமான நிலையத்தில் இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை