உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திடீர் மாரடைப்பு ஏ.எஸ்.ஐ., மரணம்

திடீர் மாரடைப்பு ஏ.எஸ்.ஐ., மரணம்

உடுப்பி: போலீஸ் துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிக்கு நடந்த பிரிவு உபச்சார விழாவில் பாடும் போது, ஏ.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழந்தார். உடுப்பியை சேர்ந்தவர் விஸ்வநாத், 56, மால்பே போலீஸ் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ.,யாக இருந்தார். இதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு அதிகாரிக்கு நேற்று முன்தினம் பிரிவு உபச்சார விழா நடந்தது. இதில், போலீசார் உற்சாகத்துடன் நடனமாடி, பாடல் பாடிக் கொண்டிருந்தனர். ஏ.எஸ்.ஐ., விஸ்வநாத் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ