உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிளி ஜோசியரிடம் கேளுங்கள்: துணை முதல்வர் சிவகுமார்

 கிளி ஜோசியரிடம் கேளுங்கள்: துணை முதல்வர் சிவகுமார்

''மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் அல்லது தலைமை மாற்றம் நடக்குமா என்பதை நீங்களே கிளி ஜோசியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித் தார். புதுடில்லியில் கட்சி மேலிட த லைவர்களை சந்தித்த பின், பெங்களூரு திரும்பிய துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: டில்லி செல்லும்போது கட்சி தலைவர்களை சந்திப்பேனே தவிர, அரசியல் குறித்து விவாதித்ததில்லை. நான் துணை முதல்வர் மட்டுமல்ல; மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளேன். பீஹார் தேர்தல் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே மிகவும், 'பிசி'யாக இருந்ததால், அவரை சந்திக்கவில்லை. மேகதாது திட்டத்திற்காக நீதிமன்றத்தில் எங்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்களை வாழ்த்தினேன். இத்திட்டத்தை தொடரவும், தமிழகத்துக்கு தண்ணீர் பங்கு கிடைக்கவும், மத்திய நீர் ஆணையம் திட்டத்துக்கு அனுமதி வழங்கவும், நீதிமன்றம் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. கிருஷ்ணா, மகதாயி திட்டங்கள் குறித்தும் வக்கீல்களுடன் விவாதித்தேன். எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சராகும் உரிமை உள்ளது. அவர்களை அமைச்சரவையில் சேர்க்க, முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. தங்கள் வழியில் கட்சிக்காக அவர்கள் தியாகம் செய்துள்ளனர். அதனால் தான், அவர்கள் அதிகாரத்துக்கு ஆசைப்படுகின்றனர் . இதை தவறு என்று சொல்ல முடியாது. அமைச்சரவை மாற்றம் அல்லது தலைமை மாற்றம் நடக்குமா என்பதை நீங்களே கிளி ஜோசியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்