உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பீர் பாட்டிலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை

பீர் பாட்டிலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை

பனசங்கரி: குடிபோதையில் பீர் பாட்டிலால் தலையில் அடித்து ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, தியாகராஜநகரில் வசித்தவர் சுரேஷ், 45; ஆட்டோ ஓட்டுநர். இவரது நண்பர் வேலு, 44. நேற்று முன்தினம் இரவு இருவரும், பனசங்கரியில் உள்ள மதுக்கடைக்கு சென்றனர். அங்கு இருவரும் மது அருந்தினர். பின், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஆட்டோவில் புறப்பட்டனர். போதையில் இருந்த சுரேஷ், வேலுவுக்கு இடையே தனிப்பட்ட விஷயங்களுக்காக வாய்த்தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த வேலு, பீர் பாட்டிலால் சுரேஷ் மண்டையில் ஓங்கி அடித்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். வேலுவை கைது செய்து பனசங்கரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை