மேலும் செய்திகள்
தங்கவயல் மாணவர்களின் மாதிரி இளைஞர் லோக்சபா
07-Nov-2026
தங்கவயல்: ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சைக்கிள் ஓட்டம் நேற்று நடந்தது. ராபர்ட்சன்பேட்டையில் உள்ள நகராட்சி மைதானத்தில் இருந்து சைக்கிள் ஓட்டத்தை, நேற்று காலை 6:00 மணிக்கு டாக்டர் ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். தங்க வயலில் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள், நுாறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சைக்கிள் ஓட்டத்தில் பங்கேற்றனர். 2, 5, 10, 20 கி.மீ., துாரம் சைக்கிள் ஓட்டம் நடந்தது. ராபர்ட் சன்பேட்டை நகராட்சி மைதானத்தில் இருந்து பி.எம்., சாலை வழியாக சுராஜ்மேல் சதுக்கம், கீதா சாலை, சுவர்ண குப்பம், பாரண்ட ஹள்ளி, காந்தி சதுக்கம், ஸ்கூல் ஆப் மைன்ஸ், என்றீஸ், ஐந்து விளக்கு பகுதி, உரிகம், சாம்பியன் வழியாக மீண்டும் நகராட்சி மைதானத்தை அடைந்தனர்.
07-Nov-2026