உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நந்திமலை, முல்லய்யனகிரியில் புத்தாண்டு கொண்டாட தடை

 நந்திமலை, முல்லய்யனகிரியில் புத்தாண்டு கொண்டாட தடை

சிக்கமகளூரு: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், விதிகளை மீறுவர் என்பதால், முல்லய்யனகிரி, நந்திமலையில் புத்தாண்டு கொண்டாட மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. புத்தாண்டு தருணத்தில், பலரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வர். அங்கு தங்கி புத்தாண்டை வரவேற்பர். இயற்கை காட்சிகள் நிறைந்த மலைப்பிரதேசங்களில் பார்ட்டி நடத்தி, மதுபானம் குடித்தும் கொண்டாடுவர். போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும் நடக்கும். இதை தடுக்கும் நோக்கில், சிக்கபல்லாபூரின் பிரசித்தி பெற்ற நந்தி மலையில், டிசம்பர் 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 10:00 மணி வரை சுற்றுலா பயணியருக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே விருந்தினர் விடுதிகளில், முன்பதிவு செய்துள்ளவர்களை தவிர, வேறு யாருக்கும் அனுமதி இல்லை என, சிக்கபல்லாபூர் மாவட்ட கலெக்டர் ரவீந்திரா உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று, சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முல்லய்யனகிரி, சீதாளய்யன கிரி உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும், டிசம்பர் 31ல் மாலை 6:00 மணி முதல் ஜனவரி 1ல் காலை 6:00 மணி வரை சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் பார்ட்டி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் தடைவிதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி