கோலார் மாவட்டத்தில் பந்த் ஜனபரா வேதிகே அழைப்பு
தங்கவயல்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து நாளை 17ம் தேதி கோலார் மாவட்ட 'பந்த்'திற்கு கோலார் மாவட்ட ஜனபரா வேதிகே என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கோலார் மாவட்ட தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர், விவசாயிகள், தொழிலாளர்கள், கன்னட அமைப்பினர், மகளிர் சங்கங்கள் இணைந்த கோலார் மாவட்ட ஜனபரா வேதிகே என்ற அமைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதை கண்டித்து நாளை 17ம் தேதி காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை 'பந்த்' நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ராபர்ட் சன் பேட்டை எம்.ஜி.மார்க்கெட், பஸ் நிலையம், ஆண்டர்சன் பேட்டை ஆகிய இடங்களில் இதற்கான துண்டுப் பிரசுரங்களை அந்த அமைப்பினர் விநியோகம் செய்தனர். இந்த 'பந்த்'தில் சுயமாக பங்கேற்கும்படி அனைத்துத் தரப்பினரையும் அந்த அமைப்பினர் கோரியுள்ளனர்.