மேலும் செய்திகள்
விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
29-Jun-2026
கங்கம்மனகுடி: பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் ஏட்டுவுக்கு அடி, உதை விழுந்தது. பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றுபவர் மஞ்சுநாத், 45. நேற்று முன்தினம் இரவு சஞ்சய்நகரில் இருந்து கங்கம்மனகுடிக்கு பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றார். தன் அருகில் நின்று பயணம் செய்த பெண்ணிடம், அத்துமீறி நடந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது உறவினர்களுக்கு மொபைல் போனில் தகவல் கொடுத்தனர். பஸ் நின்றதும், மஞ்சுநாத்துக்கு பெண்ணின் உறவினர்கள் அடி, உதை கொடுத்தனர். காயம் அடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் அளித்த புகாரில் மஞ்சுநாத் மீது வழக்கு பதிவானது. தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மஞ்சுநாத்தும், புகார் செய்துள்ளார்.
29-Jun-2026