உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கஞ்சா விற்பனை பீஹார் நபர் கைது

கஞ்சா விற்பனை பீஹார் நபர் கைது

உடுப்பி: உடுப்பி மாவட்டத்தில் உள்ள சிவல்லி கிராமத்தில், நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மணிப்பால் ரயில்வே நிலைய சாலை, டயானா டாக்கீஸ் கிராசில், ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.இதை பார்த்த போலீசார், அந்நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 60,680 ரூபாய் மதிப்புள்ள 690 கிராம் கஞ்சா, மொபைல் போன், 680 ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், அவர் பீஹார் மாநிலம், பன்கா மாவட்டத்தை சேர்ந்த பிரஹன்தேவ் யாதவ், 37, என தெரிந்தது.அவர் அண்டை மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை