உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண்ணை கர்ப்பமாக்கிய பா.ஜ., பிரமுகர் மகனுக்கு நிழலுலக தாதா பெயரில் மிரட்டல்

பெண்ணை கர்ப்பமாக்கிய பா.ஜ., பிரமுகர் மகனுக்கு நிழலுலக தாதா பெயரில் மிரட்டல்

மங்களூரு: இளம்பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிய புத்துார் பா.ஜ., பிரமுகர் ஜெகன்னிவாச ராவ் மகன் கிருஷ்ணாஜி ராவுக்கு, நிழலுலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் பா.ஜ., பிரமுகரின் மகன் கிருஷ்ணாஜி ராவ், 21. இவர் தன்னுடன் படித்த 19 வயது இளம்பெண்ணை காதலித்தார். தன் வீட்டில் யாரும் இல்லாதபோது, இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். இதுபோன்று, பல முறை நடந்தது.இதில் இளம்பெண் கருவுற்றார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். கிருஷ்ணாஜி ராவ் சம்மதிக்கவில்லை. தன் பெற்றோரிடம் விஷயத்தை இளம்பெண் கூறினார். அவர்கள் கிருஷ்ணாஜி ராவின் பெற்றோரை சந்தித்து, திருமண பேச்சு நடத்தினர். அவர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர்.ஆனால் கிருஷ்ணாஜி ராவ் சம்மதிக்கவில்லை. அவர் மீது புத்துார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் பதிவானதும் தலைமறைவான அவர், சில நாட்களுக்கு முன்பு, மைசூரில் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே நிழலுலக தாதா யோகேஷ் பெயரில், ஊடகத்தினரை தொடர்பு கொண்ட நபர், 'கிருஷ்ணாஜி ராவ் சிறையில் இருந்து வந்ததும், அவர் காதலித்து, கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். 'அவருக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக, பா.ஜ., உட்பட ஹிந்து அமைப்பினரும் நிற்கவில்லை. பெண்ணிடம் பணம் இல்லை. பக்கபலம் இல்லை என, தவிக்க விடுவதா? அனைவரும் சேர்ந்து, பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை