உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., - ம.ஜ.த.,வால் காங்கிரசை ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் சித்தராமையா

பா.ஜ., - ம.ஜ.த.,வால் காங்கிரசை ஒன்றும் செய்ய முடியாது: முதல்வர் சித்தராமையா

'பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் பொய் சொல்வதில் திறமையானவர்கள். இருவரும் இணைந்து செயல்பட்டாலும், அவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.தாவணகெரேயில் அவர் கூறியதாவது:'காங்கிரஸ் அரசு எந்த மேம்பாட்டுப் பணியும் செய்யவில்லை; எங்களிடம் பணம் இல்லை' என, எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. தாவணகெரேயில் 1,356 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதை அவர்களால் பார்க்க முடியவில்லையா?இம்மாதம் 11ம் தேதியுடன், பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யும் 'சக்தி' வாக்குறுதி திட்டம் செயல்பட துவங்கி, இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன. தாவணகெரேயில், 8.90 கோடி பெண்கள், இலவசமாக பஸ்சில் பயணம் செய்துள்ளனர். 2023 ஜூலையில் 'அன்ன பாக்யா' திட்டத்தை செயல்படுத்தினோம்.எங்கள் அரசு, 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்க முடிவு செய்தது. 5 கிலோ போதாதால், அதை 10 கிலோவாக உயர்த்தினோம். 'கிரஹ ஜோதி' திட்டத்தின் கீழ், 1.64 கோடி குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறோம். 'கிரஹ லட்சுமி' திட்டத்தை செயல்படுத்தி, 2,000 ரூபாய் வழங்க திட்டம் வகுத்துள்ளோம்.வேலையில்லாத இளைஞர்களுக்கு 3,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் மேம்பாட்டுப் பணிகள் இல்லையா? இதற்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் 2,000 கோடி ரூபாய் வேலைகளை செய்துள்ளோம். இது வளர்ச்சி இல்லையா? பா.ஜ., காலத்தில் ஒரு வீடு கூட கொடுக்கப்படவில்லை. அவர்கள் கொள்ளை அடித்தனர். துப்புரவு பணியாளர்களுக்கு 1,892 வீடுகள் கொடுத்துள்ளோம். பா.ஜ.,வினருக்கு மரியாதை, கவுரவம் உள்ளதா?மோடி பிரதமரானபோது தங்கத்தின் விலை 28 ஆயிரம் ரூபாயாக இருந்து. இப்போது ஒரு லட்சம் ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை 43 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இப்போது 95 ஆயிரம் ரூபாயாக உள்ளது.பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 400 ரூபாயாக இருந்த எரிவாயு, 890 ரூபாயாக உள்ளது. முன்பு எரிவாயுக்கு மானியம் கொடுத்தனர். இப்போது அதையும் நிறுத்திவிட்டனர். இதனால் மக்கள் விறகு அடுப்புகளுக்கு திரும்பி உள்ளனர். புதுடில்லி, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேச தேர்தல்களில், எங்கள் வாக்குறுதிகளை நகலெடுத்து, ஆட்சியை பிடித்தனர்.பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் பொய் சொல்வதில் திறமையானவர்கள். இருவரும் இணைந்து செயல்பட்டாலும், அவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களின் வாக்குறுதி திட்டங்களால், இரு கட்சி தொண்டர்களும் பயனடைந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை