உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார் சிவகுமாரை விமர்சித்த பா.ஜ., ரவி

வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பார் சிவகுமாரை விமர்சித்த பா.ஜ., ரவி

பெங்களூரு : “அரசியலமைப்பை பற்றி நாங்கள் ஏதாவது பேசி இருந்தால், வானத்திற்கும், பூமிக்கும் துள்ளிக் குதித்திருப்பார்,” என, துணை முதல்வர் சிவகுமாரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி விமர்சித்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் டி.என்.ஏ., அரசியலமைப்புக்கு எதிரான மனநிலையை கொண்டது. அம்பேத்கர் முன்மொழிந்த சீரான சிவில் சட்டம் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. மத்திய பா.ஜ., அரசு செயல்படுத்த முயன்றால், காங்கிரஸ் எதிர்க்கும்.துணை முதல்வர் சிவகுமார் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று பேசியது உண்மை. நாங்கள் ஏதாவது பேசி இருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் இந்நேரம் அவர் துள்ளிக் குதித்திருப்பார்.மத அடிப்படையிலான இடஒதுக்கீடு, அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் செல்வத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதாக சொல்லவில்லை. முஸ்லிம்களுக்கு மட்டும் பகிர்ந்து அளிப்பேன் என்றார்.அரசியலமைப்பு சட்டம் குறித்து நிறைய அறிவு கொண்ட முதல்வர் சித்தராமையா, ஓட்டு வங்கி அரசியலுக்காக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.சமீபத்தில் சென்னை சென்ற சிவகுமார், மேகதாது அணை திட்டம் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி, அந்த திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கி வந்திருக்க வேண்டும்.'ஹனிடிராப்' விவகாரத்தில் அமைச்சர் ராஜண்ணா சட்டசபையில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டும். இன்னும் காத்திருப்பதன் அவசியம் என்ன?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி