உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாளை பா.ஜ., சாலை மறியல் போராட்டம்

நாளை பா.ஜ., சாலை மறியல் போராட்டம்

மோசமான சாலைகள்ஷிவமொக்கா: “மோசமான சாலைகளுக்கு காரணமான மாநில அரசை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளின் மோசமான நிலைமை குறித்து ஷிவமொக்காவில் பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா நேற்று கூறியதாவது: பெங்களூரில் சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மற்ற மாவட்டங்களின் உள்ள சாலைகளின் நிலைமையும் மோசமாகவே உள்ளன. இந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இதை கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாட்டங்களிலும் பா.ஜ., தொண்டர்கள் போராட்டம் நடத்துவர். 224 தொகுதிகளிலும் காலை 11:00 மணி முதல் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டது சாமானியர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை