உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வுக்கு பா.ஜ., கடும் கண்டனம்

பெங்களூரு: ஆஷாடா மாதம் வெள்ளிக்கிழமையன்று, மைசூரின் சாமுண்டீஸ்வரியை தரிசிக்க, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்ததற்கு பா.ஜ., அதிருப்தி தெரிவித்துள்ளது.இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் மகேஷ், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையாவும், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஹாதேவப்பாவும், சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிப்பதன் மூலம், ஹிந்து பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர்.ஜூன் 27 முதல், ஆஷாடா மாதம் துவங்குகிறது. ஆஷாடா வெள்ளிக்கிழமைகளில், மைசூரின் சாமுண்டீஸ்வரியை சிறப்பு தரிசனம் செய்ய, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது சரியல்ல. அரசு திவால் ஆகியுள்ளது. அதிக கட்டணம் வசூலித்து, நிதி திரட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் அரசு ஹிந்துக்களுக்கு எதிரானது.தசரா கொண்டாட்டத்துக்கு, 41.7 கோடி ரூபாய் செலவிட்டதாக, அரசு கூறுகிறது. இது தொடர்பான விபரங்களை வெளியிட, மாவட்ட நிர்வாகம் 10 மாதங்கள் எடுத்துகொண்டது. இது குறித்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.முதல்வர் சித்தராமையா, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். இதற்கு முன் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, 165 கோடி ரூபாய் செலவிட்டனர். அந்த பணம் வீணாகியது. அதை பொது மக்களுக்கு திருப்பித்தர வேண்டும்.மக்கள் தொகை மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு இல்லை. முதல்வர் சித்தராமையா, தொந்தரவில் சிக்கும் போது, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விஷயங்களை, கையில் எடுத்து கொள்கிறார்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை