உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சித்தராமையா ரூ.300 கோடி வசூல் பா.ஜ., ஸ்ரீராமுலு குற்றச்சாட்டு

சித்தராமையா ரூ.300 கோடி வசூல் பா.ஜ., ஸ்ரீராமுலு குற்றச்சாட்டு

சித்ரதுர்கா: ''பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பிரசாரத்துக்காக மாநில அமைச்சர்களிடம், முதல்வர் சித்தராமையா 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளார்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு குற்றஞ்சாட்டினார். சித்ரதுர்காவில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் சித்தராமையாவின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இவர் நவம்பர் 15ல், டில்லிக்கு செல்லவுள்ளார். தன் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார். நவம்பர் 15க்கு பின், என்ன புரட்சி நடக்கிறது என்பதை, நாங்களும் பார்க்க வேண்டும். வரும் நவம்பரில் காங்கிரஸ் அரசு, இரண்டரை ஆண்டுகள் நிறைவு செய்கிறது. முதல்வர் மாற்றப்படுவார் என, தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தான் சிலர், 'நவம்பர் புரட்சி' என அழைக்கின்றனர். தன் பதவியை தக்க வைத்து கொள்ள, சித்தராமையா முயற்சிக்கிறார். பீஹார் சட்டசபை தேர்தலுக்கு, நிதி திரட்டி தருவதன் மூலம், மேலிடத்தை கவர முற்பட்டுள்ளார். அமைச்சர்களை உணவுக்கு வரவழைத்து, பீஹார் தேர்தலில் கட்சியின் செலவுக்காக, 300 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார். காங்கிரசை பொறுத்தவரை, சித்தராமையா கற்பக விருக்ஷமாகவும், காமதேனுவாகவும் மாறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ