பார்வையற்ற மாமியார் மணப்பெண் தற்கொலை
பெலகாவி: திருமணத்துக்கு முந்தைய நாள், மணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது.பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவின், நவலிஹாளா கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரூதி, 24. இவருக்கு பெலகாவியை சேர்ந்த இளைஞருடன், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. சிக்கோடியில் திருமண மண்டபத்தில், திருமண ஏற்பாடுகள் நடந்தன.மே 25ம் தேதி, முகூர்த்தம் நடக்கவிருந்தது. குடும்பத்தினர் உறவினர்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் நடந்தன. முந்தைய நாள் மணமகளுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போதுதான் மணமகனின் தாயாருக்கு, இரண்டு கண்களும் தெரியாது என்பது தெரிந்தது.தன் வருங்கால மாமியார் பார்வையற்றவர் என்பதை அறிந்த ஸ்ருதி மனம் வருந்தினார். வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சிக்கோடி போலீசார் விசாரிக்கின்றனர்.