உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குடிநீர் கசிவை தடுக்கும் புளு போர்ஸ் துவக்கம்

 குடிநீர் கசிவை தடுக்கும் புளு போர்ஸ் துவக்கம்

பெங்களூரு: பெங்களூரில் குடிநீர் கசிவை தடுக்க 'புளுபோர்ஸ்' சிறப்புப் படை, ரோபோடிக் தொழில்நுட்பம் திட்டத்தை துணை முதல்வர் சிவகுமார் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது: பெங்களூரில் வசிப்போருக்கு துாய குடிநீர் வழங்குவது அரசின் பொறுப்பு. பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம், நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது. இந்த முறையால் குடிநீர் கசிவு உடனடியாக சரிசெய்யப்படும். குடிநீர் வாரிய ஊழியர்கள், புளுபோர்ஸுக்கு என் பாராட்டுகள். ரோபோடிக் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது: ரோபோடிக் தொழில்நுட்பம் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டறியும். பள்ளம் தோண்டப்பட்டு கசிவு சரிசெய்யப்படும். சட்டவிரோத இணைப்பை கண்டறியும். 28 சதவீத குடிநீர் இழப்பு தவிர்க்கப்படும். இந்த வாரம் முதல் 16 புளுபோர்ஸ் குழுவினர் செயல்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ