உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சிட்டி சிவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்களூரின் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்று காலை 'இ - மெயில்' வழியாக, மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். 'இ - மெயிலை' கண்ட நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஹலசூர் கேட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், நீதிமன்றத்துக்கு வந்து சோதனை நடத்தினர். அனைத்து இடங்களில் தேடியும், வெடிபொருள் எதும் சிக்கவில்லை. இது பொய்யான மிரட்டல் என்பது தெரிந்தது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வக்கீல்கள், ஊழியர்கள், வழக்கு தொடர்பாக வந்த மக்கள் கலக்கம் அடைந்தனர். பொய்யான மிரட்டல் என, போலீசார் கூறிய பின், நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை