உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பார்ட்டியில் மது குடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை

 பார்ட்டியில் மது குடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை

சிக்கமகளூரு: திருட்டுத்தனமாக விருந்தில் மது அருந்திய சிறுவன், பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவில், சிறிய விஷயங்களுக்காக, சிறார் தற்கொலை செய்து கொள்வது நடக்கிறது. அறிவுரை கூறியது, மொபைல் போனை பயன்படுத்த தடை விதித்தது, பெற்றோர் திட்டியது என, பல காரணங்களுக்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு, தன் ஆருயிர் தோழி இறந்ததால், பள்ளிச்சிறுமி தற்கொலை செய்த சம்பவம் நடந்தது. இதே போன்ற சம்பவம், சிக்கமகளூரில் நடந்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், பாளஹொன்னுார் அருகில் உள்ள மேல்வார் கிராமத்தில் வசித்தவர் பிரவச்சன், 13. இவர் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் இல்லத்தின் திருமண நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்றிருந்தார். அங்கு நடந்த திருமண பார்ட்டியில், பிரவச்சன் திருட்டுத்தனமாக மது அருந்தினார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவர், அடிப்பர் என, அஞ்சினார். இதே பயத்தில் இவர், நேற்று அதிகாலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, பாளஹொன்னுார் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ