உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குழந்தைகள் விரும்பி கேட்கும் பிரட் ரசமலாய்

குழந்தைகள் விரும்பி கேட்கும் பிரட் ரசமலாய்

இனிப்பு என்றால், அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். குறிப்பாக ரசமலாய் இனிப்பு, பெரியவர் முதல், சிறியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே சுவையான ரசமலாய் தயாரிக்கலாம். செய்முறை முதலில் பிரட் ஸ்லைஸ்களின் ஓரங்களை, கத்தியால் வெட்டி கொள்ளவும். நடுப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடியாக்கவும். பன்னீரை துருவி வைக்கவும். அகலமான பாத்திரத்தில் பிரட் துாள், துருவிய பன்னீர், இரண்டு ஸ்பூன் பால் பொடி, 4 ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டில் வைக்கவும். அதன் பின் வேறொரு கிண்ணத்தில், பால், மிச்சமுள்ள பால் பொடி, பொடித்த சர்க்கரை, மஞ்சள் புட் கலர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இந்த கலவையில், பாலேடு சேர்த்து மீண்டும் கலக்கவும். அதன்பின் ஏற்கனவே தயார் செய்து, தட்டில் வைத்துள்ள உருண்டைகளை போடவும். இதன் மீது பால் கலவையை ஊற்றவும். பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பை துாவி அலங்கரித்தால், சுவையான பிரட் ரசமலாய் தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி செய்து தரும்படி அடம் பிடிப்பர் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி