உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரேக் பாஸ்ட் டீசர் தான்: பசவராஜ் பொம்மை கிண்டல்

 பிரேக் பாஸ்ட் டீசர் தான்: பசவராஜ் பொம்மை கிண்டல்

: ''முதல்வர், துணை முதல்வர் இடையிலான, 'பிரேக் பாஸ்ட் மீட்டிங்' வெறும் டீசர் தான். முழு சினிமா இனி திரைக்கு வரும்,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கூறினார். டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தனித்தனியாக பிரேக் பாஸ்ட் மீட்டிங் நடத்தி, காலத்தை வீணாக்குகின்றனர். மாநில மக்களின் நலனில் அக்கறை காட்டுவது யார் என்பதே, எங்களின் கவலையாகும். இவர்களின் பிரேக் பாஸ்ட் மீட்டிங் வெறும் டீசர் மட்டுமே. வரும் நாட்களில் முழு திரைப்படம் வெளியாகும். ஒருவர் நாற்காலியை பறிக் க முயற்சிக்கிறார். மற்றொருவர் தக்க வைக்க முயற்சிக்கிறார். கர்நாடக காங்கிரஸ் அரசு, நாடகத்தை நிறுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். கர்நாடகாவில் காங்., அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகளாகிறது. காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்தை நிவர்த்தி செய்வதில், அக்கட்சி மேலிடம் தோற்றுள்ளதாகவே தோன்றுகிறது. எங்குள்ளது கட்சி மேலிடம். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இயலாமையை தெரிவித்துள்ளார் என்றால், மேலிடம் இருப்பதில் அர்த்தமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை