அமைச்சரவை விரிவாக்கம் சிவகுமார் விளக்கம்
பெங்களூரு: ''இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்,'' என முதல்வர் சிவகுமார் கூறினார். அவரது பேட்டி: டில்லியில் அனைத்து கட்சிகளை சேர்ந்த கர்நாடக எம்.பி.,க்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளேன். அப்போது, மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் மேகதாது உள்ளிட்ட நீர்த்தேக்க திட்டங்கள் கு றித்து விவாதிப்பேன். நான் முதல்வரான பிறகு முதன்முறையாக அனைத்து கட்சி எம்.பி.,க்களிடம் வேண்டுகோள் வைக்கப் போகிறேன். இதையடுத்து, பெங்களூரில் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடத்தப்படும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பல செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.