உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு

நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய 5 பேர் மீது வழக்கு

பெங்களூரு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதுாறு பரப்பிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வக்கீல் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார். இச்சம்பவத்திற்கு ஆதரவாகவும், நீதிபதி குறித்து எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட கேசரி நந்தன், ஸ்ரீதர் குமார், நாகேந்திர பிரசாத், ரமேஷ் நாயக், மஞ்சுநாத் ஆகிய ஐந்து பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ