உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரபல ஜோதிடருக்கு மிரட்டல் பெண் உட்பட இருவர் மீது வழக்கு

பிரபல ஜோதிடருக்கு மிரட்டல் பெண் உட்பட இருவர் மீது வழக்கு

சிக்கஜாலா: 'வீடியோவை வெளியிடுவோம்' என்று கூறி, பிரபல ஜோதிடரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் உட்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.பெங்களூரு, சிக்கஜாலாவை சேர்ந்தவர் ஆனந்த் குருஜி; பிரபல ஜோதிடர். 'டிவி' நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் தொடர்பாக பேசுகிறார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களாக இரண்டு மொபைல் நம்பர்களில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பேசி உள்ளனர். 'உங்கள் தனிப்பட்ட வீடியோ எங்களிடம் உள்ளது. நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், வீடியோவை வெளியிட்டு விடுவோம்' என்று மிரட்டி உள்ளனர். ஆனால், அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்த் குருஜி காரில் சென்ற போது, ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காரை வழிமறித்து பணம் தர வேண்டும் என்று கூறி ஆபாசமாக திட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் யார் என்று விசாரித்த போது, யு - டியூபர்களான கிருஷ்ணமூர்த்தி, திவ்யா வசந்த் என்பது தெரிந்தது.இது குறித்து ஆனந்த் குருஜி தரப்பில், சிக்கஜாலா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.திவ்யா வசந்த், முன்பு கன்னட தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். பின், அந்த வேலையை விட்டுவிட்டு சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தினார். ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.இந்திரா நகரில் ஸ்பா உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, கடந்த ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். பின், ஜாமினில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ