வனத்துறையினர் மீது பெண் புகார் 5 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ் நகரில் புலி கூண்டில் வனத்துறையினரை அடைத்து வைத்ததாக, ஐந்து விவசாயிகள் மீது வழக்குப் பதி வானது. அதேவேளையில், தன்னையும், தன் மகனையும் தாக்கியதாக, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என, 15 பேர் மீது அக்கிராமத்தை சேர்ந்த பெண் அளித்த புகார் தொடர்பாக, ஐந்து நாட்களுக்கு பின் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பொம்மலாபூர் கிராமத்தில், செப்., 8ல் புலியை பிடிக்க வனத்துறையினர் தாமதமாக வந்தனர். ஆத்திரமடைந்த கிராமத்தினர், அவர்களை பிடித்து, புலியை பிடிக்கும் கூண்டில் அடைத்து, சிறை வைத்தனர். தகவல் அறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளை சமாதானப்படுத்தினர். இதையடுத்து வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மறுநாளே, கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் மீது, வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், குண்டுலுபேட் போலீசில் வழக்குப் பதிவானது. இதை அக்கிராமத்தினர் கண்டித்தனர். விவசாயிகள் சார்பில் அதே கிராமத்தை சேர்ந்த கமலம்மா, எதிர் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என் கையை பிடித்து இழுத்து, தலையில் அடித்து கீழே தள்ளிவிட்டனர். தடுக்க வந்த என் மகனையும் தாக்கினர். வனத்துறை அதிகாரிகள் ஞானசேகர், கார்த்திக் யாதவ், சுரேஷ், சிவகுமார், ஊழியர்கள் சிவ்ணா, சசுத்ரா, சுப்ரண்யா, நாகேஷ், சோமு, பிரவீன், மணிகண்டா, வினய் குமார், சந்தோஷ், ராஜப்பா, பசவேகவுடா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். ஆனால், இப்பெண்ணின் புகாரை பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டினர். பல முறை கூறியும் பதிவு செய்யாததால், கிராமத்தினர் இரவு முழுதும் போலீஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இ தையறிந்த மற்ற விவ சாயிகள் சங்கத்தினர், நேற்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது . இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்டு, 15 வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நேற்று நடக்கவிருந்த போராட்டத்தை விவசாயிகள் ரத்து செய்தனர்.