மேலும் செய்திகள்
9 மணி நேரம் தேவையா? பிரதமருக்கு அமைச்சர் கேள்வி
08-Oct-2025
பெங்களூரு: புதுடில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசியது குறித்து விதான் சவுதா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுடில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது மூத்த வக்கீல் ராகேஷ் கிஷோர் சில நாட்களுக்கு முன் காலணியை வீசினார். இது தேசிய அளவிலான செய்திகளில் இடம்பிடித்தது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் வக்கீல் பக்தவத்சலா என்பவர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான் சவுதா போலீஸ் நிலையத்தில், நீதிபதி மீது காலணி வீசிய வக்கீல் ராகேஷ் கிஷோர் மீது புகார் செய்தார். போலீசார் ஜூரோ எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். இந்த எப்.ஐ.ஆர்., புதுடில்லி போலீசிடம் ஒப்படைக்கப்படும் என, விதான் சவுதா போலீசார் தெரிவித்தனர். நீதிபதி மீது காலணியை வீசியதை ஆதரித்து, தன் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்ட பா.ஜ., பிரமுகரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான பாஸ்கார் ராவ் மன்னிப்பு கோரினார்.
08-Oct-2025