கோலாரில் ஜாதி கணக்கெடுப்பு 97 சதவீதம் நிறைவு
கோலார்:''கோலார் மாவட்டத்தில் ஜாதி கணக்கெடுப்பு பணிகள் நேற்று வரை 96.71 சதவீதம் நிறைவடைந்துள்ளது,'' என்று, கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.நேற்று அவர் அளித்த பேட்டி:கோலார் மாவட்டத்தில் எஸ்.பி., பிரிவினர் குறித்த ஜாதிவாரி கணக்கெடுப்பு பத்து நாட்களாக நடந்து வந்தது. கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 156 வீடுகளில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர். கணக்கெடுப்பின் போது சேராதவர்கள், ஆன்லைன் மூலம் இம்மாதம் 26 முதல் 28ம் தேதி வரையில் சேர்த்து கொள்ளப்படுவர். ஜாதி கணக்கெடுப்பு பணியில், கோலார் மாவட்டம் 100 சதவீதத்தை நிறைவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.