உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 1ம் வகுப்பு வயது வரம்பு தளர்வு சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மறுப்பு

1ம் வகுப்பு வயது வரம்பு தளர்வு சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மறுப்பு

பெங்களூரு: 'முதலாம் வகுப்பில் சேர்வதற்கான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என சி.பி.எஸ்.இ., தன்னாட்சி பள்ளிகள் சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசு, முதலாம் வகுப்பில் சேரும் மாணவ - மாணவியருக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என கூறியுள்ளது. 6 வயது பூர்த்தி அடையாத குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதில் ஓராண்டு தாமதம் ஏற்படும். எனவே வயது வரம்பை குறைக்க வேண்டும் என பெற்றோர் பலரும் கர்நாடக கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவிடம் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், நடப்பாண்டில் முதலாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 5 வயது 5 மாதங்கள் நிரம்பி இருந்தால் போதும்; அடுத்தாண்டு முதல் 6 வயது ஆகி இருக்க வேண்டும் என மது பங்காரப்பா நேற்று முன்தினம் கூறினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எஸ்.இ., தன்னாட்சி பள்ளிகளின் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., விதிகளின் படி முதலாம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு 6 வயது ஆகி இருக்க வேண்டும். இந்த விதியை நாங்கள் கட்டாயம் கடைப்பிடிப்போம்.வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தியதன் மூலம், கடந்த மூன்று ஆண்டுகளாக விதிகளை கடைபிடித்த லட்சக்கணக்கான மாணவர்கள், பள்ளிகள் பாதிக்கப்படும். சில நுாறு பேருக்காக விதிகளை திருத்துவதன் மூலம் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், வயது வரம்பு தளர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ