உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆஷா பணியாளர் மதிப்பூதியத்தை உயர்த்த தயாராகும் மத்திய அரசு

ஆஷா பணியாளர் மதிப்பூதியத்தை உயர்த்த தயாராகும் மத்திய அரசு

ராம்நகர்: ‘‘பெங்களூரில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ள ஆஷா சுகாதார பணியாளர்களின் மதிப்பூதியத்தை, 1,500 ரூபாய் உயர்த்த மத்திய அரசு தயாராகி வருகிறது,’’ என, பெங்களூரு ரூரல் பா.ஜ., – எம்.பி., மஞ்சுநாத் தெரிவித்தார். பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஆஷா சுகாதார பணியாளர்களின் மதிப்பூதியம் உயர்வு குறித்து, தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநரிடம் பேசினேன். பணியாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும்படி வலியுறுத்தினேன். நாடு முழுதும் உள்ள பணியாளர்களின் மதிப்பூதியத்தை, 1,500 ரூபாய் உயர்த்த, முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அது வரவிருக்கும் குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். மேலும், மதிப்பூதியம் உயர்த்தப்படும். பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்காக, அவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை, மாநில அரசும் உயர்த்த வேண்டும். வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு நிதி மட்டும் போதாது. அதை முறையாக பயன்படுத்தி, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது அவசியம். அது மட்டுமின்றி, வட மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியல்ல. மாநிலத்தின் மொத்த வருமானம், 40 சதவீதம் பெங்களூரில் இருந்து தான் வருகிறது. பெங்களூரு தனியாக பிரிந்தால், வளர்ச்சிக்கான பணம் எங்கிருந்து வரும்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை