உள்ளூர் செய்திகள்

 செக் போஸ்ட்

பாலுக்கு பூனை காவல்

கை கட்சியில் இருந்து சிலர் ஒதுங்குவதாக, சிலர் வெளியேறுவதாக கூறப்படுது. முனிசி., தேர்தலில் தங்களுக்கு சாதகமான இட ஒதுக்கீடு கேட்டு சிலர் ஒட்டிக்கொண்டு இருக்காங்க. அப்படி அவங்களுக்கு சாதகமாக அமையாமல் போனால், அவங்க எல்லாம் எதிர்ப்பு அணியில் சேரப்போவதை தடுக்கவே முடியாது என்று கை பிரமுகர்கள் காத்திருக்காங்க. கடந்த முனிசி., தேர்தலில் யாரெல்லாம் ஜெயிக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்திய அசெம்பிளி மேடம், அதில் சாதிச்சாங்க. இப்பவும் இதே பாலிசியை கையாள போறாங்களாம். முனிசி., தலைவராக இருந்தவரு மேடைக்கு மேடை மந்திரியாக வேணும்னு ஆராதித்து பேசியவர், இப்போ அவரு, நீலக் கொடியை துாக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர் மட்டுமல்ல, இன்னும் சிலர் வரிசையில இருக்காங்க. இது, அடுத்த அசெம்பிளி தேர்தலுக்கு பெரிய ஆப்பு என்பதை புரிய வைக்க போறாங்களாம். இப்பவும் பூனைகளை பாலுக்கு காவல் வைத்திருப்பதாக சீனியர்கள் கூவுறாங்க. இதை எப்போ புரிஞ்சிக்க போறாங்களோ.

அலட்சியம் ஆபத்து

த ங்கநகரில் இதுவரை நடந்த முனிசி., தேர்தல்களில் 35 ல் 28 க்கும் அதிகமாக ஜெயிக்கிறது யாரென அலசி ஆராய்ந்து பார்க்க வேணும். உடலும், உள்ளமும் மொழியால் பிணைந்து உசுரை விட்ட தளம் தான் பொன் நிலம் என்பதை அறியாதவங்களுக்கு யார் பாடம் நடத்தப்போறாங்களோ. மூன்று லட்சம் மக்கள் தொகையில் இரண்டு லட்சம் பெரும்பான்மை இனத்தை, அதிகாரம் உள்ளவங்க பகைத்துக் கொண்டால் அல்லது அலட்சியப் படுத்தினால், 'பாலிடிக்ஸ்' அத்தியாயம் முடிந்து போகுமென்பதை எடுத்துச் சொல்ல ஆளில்லையா; சொன்னால் எடுபடாது என்று மவுனம் சாதிக்கிறாங்களா. பணம் இருந்தால் எல்லாம் சாதிக்கலாம் என பகல் கனவு காணலாமா. பணத்தில புரண்ட கிங்... மது தயாரிப்பு அதிபரோட கட்சியும் இப்போதுள்ள அவரின் காட்சியும் என்னானது. வெறும் பணம் மட்டுமே ஓட்டு பூட்டை திறக்கும் சாவி ஆகுமா. இப்பவே பெரும்பான்மையோர் ஒண்ணு சேரப்போறாங்களாம். முனிசி., தேர்தலை சவாலாக சந்திக்க போறாங்களாம்.

அவசரத்தில் அலங்கோலம்

பூ மி பூஜை, அடிக்கல் நாட்டல்... இது வழக்கமான சம்பிரதாயம். ஆனால், அந்த பூஜைகளின் பணிகள் முடிவடைய கால அளவு எத்தனை ஆண்டுகளோ. ஆர்.டி.ஓ., ஆபீஸ் கட்டடப் பணிகள் முடியுமுன்னே திறப்பு விழா நடத்தி முடிச்சாச்சாங்க. அங்கு முறையா மின்சார வசதி கூட பெறலயாம். தற்காலிக 'கரன்ட்' பயன்படுத்தி வந்ததை 'கட்' செய்திட்டாங்களாம். ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செட்டில் ஆகலயா. அதற்குரிய கமிஷன் வழங்கலயா. எதுக்கு இன்னும் உள்கட்டமைப்பு சீராகல. அந்த ஆபீசில மூட்டை, மூட்டையா கோப்புகள் பாதுகாப்பற்று சிதறி கிடக்குது. பல 'சி' செலவுல கட்டப் பட்ட கட்டடம் இன்னும் முழு தகுதியோட எப்போ இயங்க போகுதோ. இது அவசரத்தின் அலங்கோலமுன்னு பலரது பேச்சா இருக்குது.

தொழிற் பூங்கா மலருமா?

ம ண் வாரி எந்திர தொழிற்சாலையிடம் பயன்படுத்தாமல் இருந்த 1,000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி பதாகையை நட்டு வெச்சிருக்காங்களே தவிர, தொழிற்பூங்காவில் என்ன மாதிரி தொழிற்சாலைகள் எல்லாம் வரப்போகுது. இதுக்காக எத்தனை கோடி நிதியை அரசு ஒதுக்கி இருக்கு. வெளிப்படையா அரசு இன்னும் ஏன் அறிவிக்கல. மத்திய, மாநில, கனரக தொழிற்சாலைகள் வருமா. தேவையான மின்சாரம், தண்ணீர் கிடைக்குமா. உள்கட்டமைப்பு திட்டத்தை யாரிடம் தான் ஒப்படைக்கப் போறாங்க. ஓப்பன் டெண்டர் எப்போது. இதெல்லாம் வரும்... ஆனால் எப்போ வருமோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை