திம்மக்கா உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டசபையில் முதல்வர் இரங்கல்
பெலகாவி: சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா உள்ளிட்டோர் மறைவுக்கு, கர்நாடக சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று இரங்கல் தெரிவித்தார். பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. சமீபத்தில் மரணம் அடைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து, முதல்வர் சித்தராமையா பேசினார். சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா, பாகல்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹெச்.ஒய்.மேட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.வி.தேவராஜ், சிவசரணப்பா பாட்டீல், எழுத்தாளர் பைரப்பா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்கள் செய்த சாதனைகள் பற்றி எடுத்து கூறினார்.