உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொரோனா பரவலை தடுப்பது பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கொரோனா பரவலை தடுப்பது பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

பெங்களூரு: கொரோனா பரவலை தடுப்பது பற்றி, அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.கர்நாடகாவில் கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கம் ஏற்படுகிறது. நேற்று 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பல துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா நேற்று விதான் சவுதாவில் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:கொரோனா பரவல் குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும். மே மாத துவக்கத்தில் இருந்து, மாநிலத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தினமும் 500 பேருக்கு சோதனை நடக்கிறது. கடந்த 10 நாட்களில் 5,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் 862 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது.இதில் 11 பேர் இறந்து உள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா பாதிப்பில் இறக்கவில்லை என்பது ஆய்வக அறிக்கையில் தெரிந்தது. இணைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இறந்து உள்ளனர். ஒருவரின் அறிக்கை இன்னும் வரவில்லை.கொரோனா குறித்து யாரும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை கையாள உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுகாதாரம், மருத்துவ கல்வி துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால், அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை