மேலும் செய்திகள்
காங்., ஆலோசனை குழுவில் 'மாஜி' அமைச்சர் ராஜண்ணா
05-Nov-2025
துமகூரு: தான் ஏற்பாடு செய்த விருந்தில் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்காததால், முன்னாள் அமைச்சர் ராஜண்ணா ஏமாற்றமடைந்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜண்ணா. இவர் மாநில காங்., தலைவர் பதவி மீது, கண் வைத்திருந்தார். தனக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால், அமைச்சர் பதவியை விட்டுத்தரவும் தயாராக இருந்தார். ஆனால் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால், அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. மீண்டும் அமைச்சரவையில் சேர, ராஜண்ணா முயற்சிக்கிறார். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தன் இல்லத்தில் முதல்வர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நேற்று முன் தினம் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். முதல்வர் தவிர, அமைச்சர்கள் பரமேஸ்வர், பைரதி சுரேஷ், சரண பிரகாஷ் பாட்டீல், சுதாகர், சிரா எம்.எல்.ஏ., ஜெயசந்திரா உட்பட, பலரையும் ராஜண்ணா அழைத்திருந்தார். முதல்வருக்காக நாட்டு கோழிக்குழம்பு, கேழ்வரகு களி தயாரிக்கப்பட்டது. ராஜண்ணாவின் நேரடி மேற்பார்வையில் சமையல் தயாரானது. ஆனால் கரும்பு விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததால், முதல்வர் சித்தராமையா நாள் முழுவதும், பெங்களூரிலேயே இருந்தார். பல சுற்று பேச்சு நடத்தினார். அவரால் விருந்துக்கு செல்ல முடியவில்லை. அவரது துமகூரு பயணம் ரத்தானது. எனவே ராஜண்ணாவும், விருந்தை ரத்து செய்துவிட்டார். அவர் செய்திருந்த அனைத்து ஏற்பாடுகளும் வீணாகிவிட்டன. இதனால் ராஜண்ணா ஏமாற்றமடைந்தார்.
05-Nov-2025