உள்ளூர் செய்திகள்

சினி கடலை

அர்த்தமுள்ள கதை நடிகர் சுதீப் நடிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கும் கே 47 திரைப்பட படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. இதில் நிஷ்விகா நாயுடு நடிப்பதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது ரோஷிணி பிரகாஷும் நடிக்கிறார். இது குறித்து, ரோஷிணி கூறுகையில், ''இத்தகைய கதை கொண்ட படத்தில் நடிப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக சுதீப் போன்ற பிரபலமான ஸ்டார் நடிகருடன் நடிப்பது, என் அதிர்ஷ்டம். நான் தொழிற்ரீதியில் வளர, இப்படம் எனக்கு உதவியாக இருக்கும். கே 47 திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அர்த்தமுள்ள கதை கொண்ட இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும். என் கதாபாத்திரத்தை இயக்குனர் சிறப்பாக வடிவமைத்துள்ளார்,'' என்றார். ரவுடிகள் அட்டகாசம் இசையமைப்பாளர் அதுல், 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர். இதுவரை மூன்று படங்களை இயக்கிய இவர், தற்போது பைரா என்ற படத்தை இயக்கி வருகிறார். படம் குறித்து, இயக்குநர் கூறுகையில், ''பெங்களூரின் ரவுடிகள் தொடர்பான கதையாகும். ரவுடிகளால் பாதிக்கப்பட்ட இளைஞன், இவர்களை ஒடுக்க எப்படி போராடுகிறார் என்பதே, கதையின் சாராம்சமாகும். இதில் அழகான காதலும் இருக்கும். மனதை உருக வைக்கும் உணர்ச்சிமயமான காட்சிகளும் உள்ளன. நாயகனாக மகேஷ் சித்து, ஜோடியாக ஸ்வேதா நாயகியாக நடிக்கின்றனர். சம்பத் குமார், யஷ் ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். பெங்களூரின் கலாசிபாளையா, ஓக்லிபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படும்,'' என்றார். புனித் துவக்கிய சினிமா சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்த நடிகையரில் நிஷா ரவி கிருஷ்ணனும் ஒருவர். 'கெட்டிமேளா' தொடரில், ரவுடி பேபி அமுல்யாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இப்போது அந் தொந்திட்டு காலா என்ற படத்தில் நடித்துள்ளார். இது இன்று திரைக்கு வருகிறது. கதை குறித்து நிஷா கூறுகையில், ''இந்த படத்தின் படப்பிடிப்பை, 2021ல் நடிகர் புனித் ராஜ்குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். பல காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. இதில் 1990 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். நான் புனித்தின் தீவிர ரசிகை. பட பூஜை நடந்த போது, அவரை சந்தித்தேன். அதுதான் அவரை பார்த்தது முதலும், கடைசியும் அதன்பின் அவரை நான் பார்க்கவில்லை. அடுத்த படத்துக்கு கதை கேட்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை