மேலும் செய்திகள்
தத்த ஜெயந்தி விழா: டி.ஜி.பி., சலீம் ஆய்வு
7 minutes ago
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
9 minutes ago
ஹம்பி ரயிலை கவிழ்க்க சதியா?
10 minutes ago
சிக்கமகளூரு: பாரில் நாகப்பாம்பு புகுந்ததால், பரபரப்பான நிலை காணப்பட்டது. சிக்கமகளூரு நகரின் புறநகரில், 'அக்ஷய் பார் அண்ட் ரெஸ்டாரென்ட்' உள்ளது. நேற்று மதியம் இங்கு பலர், மதுபானம் அருந்தி கொண்டிருந்தனர். அப்போது 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு, பாருக்குள் வந்தது. அங்கிருந்த ஊழியர்கள், மதுபானம் குடிக்க வந்த வாடிக்கையாளர்கள் பீதி அடைந்தனர். பாரில் இருந்த சிலர், குடிபோதையில் இருந்ததால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என, அஞ்சினர். இது குறித்து பாம்பு வல்லுநர் அக்ஷய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அவர், பாம்பை பிடித்து சென்று, பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டார். பாரில் பாம்பு புகுந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மதுபானம் அருந்த வந்த வாடிக்கையாளர்கள் பலர், மதுபானத்தை மறந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
7 minutes ago
9 minutes ago
10 minutes ago