மேலும் செய்திகள்
லால்பாக் நடைபாதைகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
10-May-2025
பெங்களூரு : 'சர்ஜாபூர் பிரதான சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை மேம்படுத்துவதற்காக, நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.மஹாதேவபுரா மண்டலத்தில் உள்ள இப்லுார் சந்திப்பு அருகே உள்ள சாலைகள், நடைபாதைகள், வடிகால்கள், பக்கவாட்டு சுவர்கள் குறித்து நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், தலைமை பொறியாளர் ரங்கநாத், நிர்வாக பொறியாளர்கள் உதய் சவுகுலே, ராகவேந்திரா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.இதன்பின், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:சர்ஜாபூர் பிரதான சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை மேம்படுத்துவதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இப்லுார் சந்திப்பில் இருந்து கார்மேலரம் ஆர்.ஜி.ஏ., டெக் பார்க் வரையிலான 4.7 கி.மீ., துாரமுள்ள சாலையில் நடக்கும் மேம்பாட்டு பணிகளுக்கு, ஏற்கனவே ஒப்புக்கொண்ட நில உரிமையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட நில ஆவணங்களை மாநகராட்சி பெயருக்கு முறைப்படி மாற்ற வேண்டும்.இப்லுார் சந்திப்பு, ஹரலுார் சந்திப்பு, கசவனஹள்ளி சாலை ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்கள் வரும் காலத்தில் முக்கிய பணியாக இருக்கும். புதிய நடைபாதை திட்டங்கள் உருவாக்கப்படும்.மஹாதேவபுரா மண்டலத்தில் மழைநீர் வடிகால்களின் நிலை, ஆக்கிரமிப்புகள் குறித்து கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். ஸ்ரீனிவாசா கிளாசிக் குடியிருப்பு பகுதியில், மழைநீர் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றியவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கிளவுட் நைன் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வந்ததால், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
10-May-2025