உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.பி.எஸ்., பள்ளிகளில் கட்டண வசூல் புகார்

கே.பி.எஸ்., பள்ளிகளில் கட்டண வசூல் புகார்

மாண்டியா: இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றாலும், கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ள, கர்நாடக பப்ளிக் பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒரே கூரையின் கீழ், நர்சரி வகுப்பு முதல், பி.யு.சி., இரண்டாம் ஆண்டு வரையிலான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கே.பி.எஸ்., எனும் கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்பட்டன. இங்கு மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.இந்நிலையில், சில பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாணவரிடமும், ஆசிரியர்கள் 2,500 முதல், 5,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.பெற்றோர் மட்டுமின்றி, பள்ளி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்களும், தொகுதி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஆனால், ஆங்கில வழியில் கல்வி அளிக்கப்படுகிறது. தனியார் கோச்சிங் இன்ஸ்டிடியூட் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக கட்டணம் வசூலிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். கட்டணம் வசூலிப்பது குறித்து, கல்வித்துறை துணை இயக்குநர் அறிக்கை கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !