உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பொய்யான தகவல் சிவராஜ் தங்கடகி மீது புகார்

பொய்யான தகவல் சிவராஜ் தங்கடகி மீது புகார்

பெங்களூரு: சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, அமைச்சர் சிவராஜ் தங்கடகி, தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த அபிடெவிட்டில் பொய்யான தகவல் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதைய அரசில் கன்னடம், கலாசாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சிவராஜ் தங்கடகி, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த அபிடெவிட்டில் பொய்யான தகவல் கொடுத்துள்ளார். உள்நோக்கத்துடன் சில சொத்துக்களை குறிப்பிடவில்லை. அதிகாரிகளை திசை திருப்பியுள்ளார். இது தேர்தல் விதிமீறல். தேர்தல் விதிகளை மீறுவது, கடுமையான குற்றமாகும். எனவே சிவராஜ் தங்கடகி மீது, தனிப்பட்ட முறையில் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி