உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்., - எம்.எல்.ஏ.,வின் காரை மகள் பயன்படுத்துவதாக புகார்

 காங்., - எம்.எல்.ஏ.,வின் காரை மகள் பயன்படுத்துவதாக புகார்

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகேவிற்கு வழங்கப்பட்ட அரசு காரை, அவரது மகள் பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. பெலகாவி மாவட்டம், காக்வாட் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே. இவர், வடமேற்கு போக்குவரத்து கழக தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு வழங்கப்பட்ட அரசு காரை, இவரது மகள் த்ருப்தி பயன்படுத்துகிறார். நேற்று காலை இவர், சிக்கோடியின் சாலை ஒன்றில் தந்தையின் அரசு காரில் பயணித்தார். இதைக்கண்ட சிலர், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அரசு வாகனங்களை அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்துவதை, பலரும் கண்டித்தனர். இந்த குற்றச்சாட்டை ராஜு காகே மறுத்துள்ளார். ''என்னை அழைத்து வருவதற்காக, என் மகள் த்ருப்தி, ஓட்டுநருடன் பெலகாவிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அரசு வாகனத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி