உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அமைச்சர் சரண பிரகாஷுக்கு தர்ம சங்கடம்

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அமைச்சர் சரண பிரகாஷுக்கு தர்ம சங்கடம்

ராய்ச்சூர்: மாவட்ட பஞ்சாயத்து அலுவலக ஹாலில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கினர்.ராய்ச்சூர் நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலக ஹாலில், அந்தந்த துறையின் முன்னேற்றம் தொடர்பாக மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், நேற்று காலையில் ஆலோசனை நடத்தினார்.அப்போது மஸ்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், கதர் மற்றும் கிராம வேலை வாய்ப்பு வாரிய தலைவருமான பசனகவுடா துருவிஹாள், ''ராய்ச்சூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை. கூட்டங்களுக்கு எம்.எல்.ஏ.,க்களை அழைக்காமல், அதிகாரிகள் அவமதிக்கின்றனர். ஊழல், முறைகேடுகளுக்கு எல்லையே இல்லை. மாவட்ட பொறுப்பு அமைச்சர் பெயருக்கு கூட்டம் நடத்திவிட்டுச் செல்கிறார். இதனால் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை,'' என, அதிரடியாக குற்றஞ்சாட்டினார்.இவரது குற்றச்சாட்டுகளை எம்.எல்.சி.,க்கள் பசனகவுடா பாதர்லி, வசந்தகுமார், சரணகவுடா பாட்டீல் பய்யாபுராவும் ஆமோதித்தனர்.இவ்வேளையில் ராய்ச்சூர் ரூரல் காங்., - எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல், அமைச்சருக்கு ஆதரவாக நின்று, ''உங்கள் தொகுதியை பற்றி மட்டும் பேசினால், எங்கள் தொகுதியை பற்றி எப்போது பேசுவது?'' என கேள்வி எழுப்பினார். அப்போது இவருக்கும், மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஒருமையில் திட்டிக்கொண்டனர்.அதிகாரிகள் கூட்டத்தில், சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்ததால், அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தர்ம சங்கடத்துக்கு ஆளானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை