உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொரோனா: முதல்வர் அவசர ஆலோசனை

கொரோனா: முதல்வர் அவசர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பொது மக்களுக்கு கொரோனா விதிமுறைகள் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் துவங்கி உள்ளது. நேற்று ஒன்பது பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.பருவ மழை வேளையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க, பெங்களூரின் விதான்சவுதாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சுகாதாரத்துறை, கல்வித்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், வல்லுநர்கள் பங்கேற்றனர்.கொரோனா குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் தகவல் பெற்றுக் கொண்டனர்.“கொரோனாவை கட்டுப்படுத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள். கடந்த முறை நடந்ததை போன்று நடந்து விடக்கூடாது. வாரந்தோறும் கொரோனா தடுப்புப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கொரோனா சூழ்நிலையை கண்காணிக்க வேண்டும்,” என, முதல்வர் சித்தாமையா உத்தரவிட்டார்.நேற்றைய கூட்டத்தில், முதல்வர் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:தற்போதைக்கு பயப்பட தேவையில்லை. வரும் நாட்களில் சூழ்நிலையை கவனித்து, நடவடிக்கை எடுங்கள்சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், செயற்கை பிராண வாயு, மருத்துவ உபகரணங்கள் உட்பட, தேவையான அனைத்தும், தயார் நிலையில் இருக்க வேண்டும்கர்ப்பிணியர். மூத்த குடிமக்கள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், சிறார்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிவது நல்லது. இது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்வாரந்தோறும் அவசியம் ஏற்பட்டால், மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ, கொரோனா சூழ்நிலை குறித்து, ஆய்வு செய்யுங்கள்; தொற்றை தீவிரமாக கண்காணியுங்கள்கர்ப்பிணியருக்கு உடல் ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்களை ஒரு மருத்துவமனையில் இருந்து, மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பாதீர்கள். அனைத்து மருத்துவமனைகளிலும், கர்ப்பிணியருக்கு தேவையான, அனைத்து வசதிகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்பள்ளிகள் திறந்தாலும், காய்ச்சல், இருமல், சளி உள்ள சிறார்களுக்கு விடுமுறை அளியுங்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது ஆரோக்கியமானது அல்லஎந்த கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும், எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்கர்நாடகாவில் கொரோனா பரவாமல், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பிணியர், குழந்தைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்பொது மக்களுக்கு உதவும் வகையில், சஹாயவாணி திறக்க வேண்டும்வரும் நாட்களில் அவசியம் ஏற்பட்டால், விமான நிலையங்களில் வெளி மாநிலம், நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு கொரோனா பரிசோதனை நடத்தவேண்டும்கொரோனா விஷயத்தில் யாரும் அலட்சியம் காட்ட கூடாது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்சுகாதார துறை அதிகாரிகள், ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல், பணியாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை