மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு
தங்கவயல்: தங்கவயலில் தொடர் மழையால் மின்சாரம் தாக்கி, பசு உயிரிழந்தது. சாம்பியன் பகுதியின் தெரு விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்க தங்கவயல் சாம்பியன் ரீப் ஹை கிரவுண்ட் பகுதியில் மின் மாற்றி ஏற்படுத்தி உள்ளனர். இந்த மின் மாற்றியின் எர்த் மின் கம்பியை பூமிக்கு அடியில் புதைத்திருக்க வேண்டும். ஆனால் பூமிக்கு மேல் தரையில் வெளியே தெரியும் படி ஏற்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பெய்த மழையின் போது, இந்த மின்மாற்றி உள்ள இடத்தின் அருகே சாம்பியன் ரீப் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பசு, மின்மாற்றியின் மின்சாரம் உள்ள எர்த் கம்பியை முட்டியது. இதில் இருந்த மின்சாரம் பசுவை தாக்கி உள்ளது. இதனால் பசு சம்பவ இடத்திலேயே இறந்தது.