மேலும் செய்திகள்
மகளிர் கல்லுாரியில் மாணவிகள் செறிவு விழா
13-Jul-2025
பாகல்கோட் : கல்லுாரியில் சேர்வதற்காக ஏழை மாணவிக்கு, இந்திய கிரிக்கெட் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், நிதி உதவி அளித்துள்ளார். பாகல்கோட் மாவட்டம், பிலாகியின் ரபகவி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. பி.யு.சி.,யில் வணிக பாடத்தில் 85 சதவீத மதிப்பெண் எடுத்தார். ஜம்கண்டி பி.எல்.டி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.சி.ஏ., படிக்க விரும்பினார். குடும்பத்தின் ஏழ்மையான சூழ்நிலையால், அவரது தந்தை தீர்த்தையாவால், மகளை கல்லுாரியில் சேர்க்க முடியவில்லை. இது அதே கிராமத்தைச் சேர்ந்த அனில் ஹுனசிகட்டிக்கு தெரிய வந்தது. பெங்களூரில் ஆர்.சி.பி., அணிக்காக வேலை செய்து வந்த தன் நண்பர்களிடம் அவர் கூறினார். அவர்கள், இவ்விஷயத்தை, கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திடம் தெரிவித்தனர். அவரும் மாணவிக்கு உதவுவதாக கூறி, 40 ஆயிரம் ரூபாயை கொடுத்தனுப்பினார். இப்பணத்தின் மூலம், தற்போது அம்மாணவி கல்லுாரியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
13-Jul-2025