உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வீட்டு வளாகத்துக்கு வந்த முதலை

 வீட்டு வளாகத்துக்கு வந்த முதலை

கொப்பால்: ஆற்றில் இருந்து வெளியே வந்த முதலை, வீட்டு வளாகத்தில் நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் ஆனேகுந்தி கிராமத்தில் வசிப்பவர் வெங்கடரமணா. இவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில், துங்கபத்ரா ஆறு பாய்கிறது. நேற்று அதிகாலையில் ஒரு முதலை, கிராமத்தில் புகுந்து வெங்கடரமணாவின் வீட்டு வளாகத்துக்கு வந்தது. அதை பக்கத்து வீட்டினர் கவனித்து, வெங்கடரமணா குடும்பத்தினரை எழுப்பி எச்சரித்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், முதலையை மீட்டு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை