மேலும் செய்திகள்
மாலை நேர டிபனுக்கு 'கேரளாவின் வட்டயப்பம்'
22-Mar-2025
பொதுவாக கோடை காலத்தில், வெப்பத்தின் தாக்கத்துக்கு இதமான உணவு, உடலை குளர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுவர். இதில் வெள்ளரிக்காயும் ஒன்றாகும். வெள்ளரிக்காயை சாப்பிட குழந்தைகள் மறுப்பர். வெறும் வெள்ளரிக்காய்க்கு பதிலாக, விதவிதமான சிற்றுண்டிகள் தயாரித்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில் வெள்ளரிக்காயில் இட்லி செய்து பார்க்கலாமா? செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அரிசியை போட்டு வறுக்கவும். அரிசி ஆறிய பின் நீரில் ஊற வைக்கவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும். அதன்பின் ஊற வைத்த அரிசி, அவல், தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு, ருசிக்கு தேவையான உப்பு போட்டு, இட்லி மாவு பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டு ரவையை வறுக்கவும். வறுத்த ரவையை, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள இட்லி மாவில் போடவும். இதில் தயிர், வெள்ளரிக்காயை சேர்ந்து நன்றாக கலக்கவும், அதன்பின் இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்தால், சூப்பரான வெள்ளரிக்காய் இட்லி தயார்.வெள்ளரிக்காய் இட்லிக்கு தொட்டுக்கொள்ள, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்கலாம்; செய்வதும் எளிது. - நமது நிருபர் -
22-Mar-2025