மேலும் செய்திகள்
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
9 minutes ago
ஹம்பி ரயிலை கவிழ்க்க சதியா?
10 minutes ago
போலீசார் அவமதித்ததாக கூறி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர்
12 minutes ago
சிக்கமகளூரு: வரும் 26 முதல் டிச., 4ம் தேதி வரை நடக்கும் தத்தஜெயந்தி விழாவை ஒட்டி, மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். சிக்கமகளூரில் வரும் 26 முதல் டிச., 4ம் தேதி வரை 'தத்த ஜெயந்தி' நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து, இங்கு வந்து வழிபடுவர். இந்த விழா ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், அதிகாரிகளிடம், மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம், நேற்று கேட்டறிந்தார். அப்போது டி.ஜி.பி., சலீம், 'ஒன்பது நாட்கள் நடக்கும் விழாவில், டிச., 2, 3, 4 ம் தேதியில் தான் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இம்முறை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள ் ஆகியவை ஸ்ரீராமசேனையுடன் கைகோர்த்து உள்ளன. நிறைவு நாளில் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எந்தவித அசம்பாவிதங்களும் ந டக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆலோசனை வழங்கினார்.
9 minutes ago
10 minutes ago
12 minutes ago