உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயில் நிலையங்களில் நந்தினி கடைகள் திறக்க முடிவு

மெட்ரோ ரயில் நிலையங்களில் நந்தினி கடைகள் திறக்க முடிவு

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில், 'நந்தினி' கடை திறக்க கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மூன்று மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகள் திறக்க அனுமதி கிடைத்துள்ளது. இதுகுறித்து, கே.எம்.எப்., நிர்வாக இயக்குநர் சிவசாமி நேற்று அளித்த பேட்டி: மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகளை திறக்க துணை முதல்வர் சிவகுமார் அனுமதி அளித்தார். முதற்கட்டமாக 10 மெட்ரோ நிலையங்களில் நந்தினி கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது உடனடியாக மூன்று மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகள் திறக்கப்படுகின்றன. மெஜஸ்டிக், சென்ட்ரல் கல்லுாரி, பையப்பனஹள்ளி ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களில், நந்தினி கடைகள் இம்மாதம் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரமோ, பொது மக்களின் சேவைக்கு திறக்கப்படும். இங்கு நந்தினி பால், நெய், இனிப்புகள், சாக்லேட், ஐஸ்கிரீம் உட்பட, அனைத்து பொருட்களும் கிடைக்கும். மற்ற மெட்ரோ நிலையங்களிலும், படிப்படியாக நந்தினி கடைகள் திறக்கப்படும். இது பயணியருக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை