உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நடைபாதையில் இருக்கும் நந்தினி கடைகளை அகற்ற முடிவு

 நடைபாதையில் இருக்கும் நந்தினி கடைகளை அகற்ற முடிவு

பெங்களூரு: பெங்களூரில், நடைபாதையில் உள்ள நந்தினி கடைகளை அகற்ற, ஜி.பி.ஏ., முடிவு செய்துள்ளது. பெங்களூரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில், ஏராளமான தெருவோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்நிலையில், நடைபாதைகளில் உள்ள மாநில அரசின் பால் பொருட்கள் விற்பனை செய்யும் நந்தினி கடைகளை அகற்ற, ஜி.பி.ஏ., எனும், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் முடிவு செய்து உள்ளது. இது குறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: நடைபாதையில் உள்ள நந்தினி கடைகளால் பாதசாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. அந்த கடைகள் அகற்றப்படும். அகற்றப்படும் கடைகளுக்கு மாற்று இடங்கள் வழங்கப்படும். அதுபோல, காய், கனி விற்பனை செய்யும் 'ஹாப்காம்ஸ்' கடைகள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவையும் அகற்றப்பட உள்ளன. இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முறையான தகவல் அளிக்கப்படும். இதன் பிறகே, அகற்றும் நடவடிக்கை துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ