உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாடிக்கையாளரை தாக்கிய டெலிவரி பாய் கைது

வாடிக்கையாளரை தாக்கிய டெலிவரி பாய் கைது

பசவேஸ்வர நகர் : பெங்களூரு பசவேஸ்வர நகர் நீதிபதிகள் காலனியில் வசித்து வருபவர் செசாங்க். இவரின் மனைவி, கடந்த 21ம் தேதி, தனியார் நிறுவன செயலி மூலம், காய்கறிகளை ஆர்டர் செய்திருந்தார்.அன்று மதியம் 2:00 மணிக்கு செசாங்க் வீட்டின் முன், காய்கறி டெலிவரிக்காக ஊழியர் விஷ்ணுவர்த்தன் வந்தார். செசாங்கின் மாமியார், காய்கறிகளை வாங்கச் சென்றார். அப்போது, விஷ்ணுவர்த்தன், 'தவறான முகவரி கொடுத்து அலைக்கழித்துவிட்டீர்கள்' என சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு வெளியே வந்த செசாங்க், 'பெண்களிடம் இப்படி தான் பேசுவாயா?' என கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கோபமடைந்த விஷ்ணுவர்த்தன், செசாங்கை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார். படுகாயம் அடைந்த செசாங்கின் கண் பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. கண் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்.இதையடுத்து, பசவேஸ்வர நகர் போலீசில் செசாங்க் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த விஷ்ணுவர்த்தனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி